யாழில் இடம்பெற்ற விபத்தில் நடராசா மரணம்!!
வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த முதியவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். அராலி மத்தி, வட்டுக்கோட்டை, கணவத்தை பகுதியைச் சேர்ந்த நடராசா (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்றுமுன்தினம் காலை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை சந்தியில் இருந்து சித்தங்கேணி செல்கிற பக்கமாக அண்ணளவாக 150 மீற்றர்கள் தூரத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குறித்த முதியவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.