20 அன்னாசிப்பழங்களைத் திருடியவர் பொலிஸ் நிலையத்தில் தற்கொலை முயற்சி!!
பொலிஸ் நிலைய கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றதாக பூகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
8 ஆயிரம் ரூபா பெறுமதியான 20 அன்னாசி பழங்களை திருடிய சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார்.சந்தேகநபர் தனது மேல் சட்டையை பயன்படுத்தி பொலிஸ் நிலைய கூண்டினுள் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார்.
இதன்போது, அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகள் சிலர் சந்தேலநபரை காப்பாற்றி தோம்பே வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.