வெள்ளவத்தை மயூரி அக்காவிடம் மாண்டு போன 66 வயது கனடா செல்வரத்தினம்!! மனைவி விவாகரத்து முயற்சி!!
கனடாவைச் சேர்ந்த கோபாலபிள்ளை செல்வரத்தினம் எனும் 66 வயது இளைஞர் தனது மனைவி, பிள்ளைகளை கனடாவில் விட்டுவிட்டு கொழும்பில் மீண்டும் ஒரு திருமணம் செய்து வாழ்வதாக தெரியவருகின்றது. மூத்த மனைவியை விவாகரத்து செய்யாது கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் தனது 2வது மனைவியுடன் வாழ்ந்து வருகின்றார். அதே நேரம் 2வது மனைவியை சட்டபூர்மாக அவர் திருமணம் செய்யவில்லை. ஆனால் அந்த தொடர்மாடி குடியிருப்பு வீடு கனடாவிலிருக்கும் செல்வரத்தினத்தின் மகளுக்கு சீதனமாக எழுதப்பட்டதாகத் தெரியவருகின்றது. ஆனாலும் சீதனம் எழுதும் போது பெற்றோருக்குப் பின்னரே மகளுக்கு குறித்த வீடு போய்ச் சேரும் என எழுதப்பட்டுள்ளதாம். இதனை சாட்டாக வைத்தே செல்வரத்தினம் தனது 2வது மனைவியுடன் குறித்த வீட்டில் கடந்த 7 மாதமாக வாழ்ந்து வருகின்றார்.
இந்த வீட்டிலிருந்து இருவரையும் துரத்துவதற்காக செல்வரத்தினத்தின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் கனடாவிலிருந்து கொழும்பு வந்தும் பலனில்லாது போய்விட்டதாகத் தெரியவருகின்றது. குறித்த அடுக்கு மாடி குடியிருப்புக்கு சென்ற செல்வரத்தினத்தின் மனைவியையும் மகளையும் செல்வரத்தினம் வீட்டுக்கு உள்ளே அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். அத்துடன் அடுக்குமாடி குடியிருப்புக்கு பாதுகாப்பு பணியிலிருந்தவர்களுக்கும் அவர்களை குடியிருப்புக்குள் நுழைய விடவேண்டாம் என கூறியதாகவும் தெரியவருகின்றது.
செல்வரத்தினம் தனது தற்போதய மனைவியை அந்த குடியிருப்பில் தங்கியிருக்கும் நாள் முதல் முக்காடு போட்டு மூடியும் வாய்க்கு மாஸ்க் அணிவித்த பின்னரே வெளியில் கொண்டு சென்று வருகின்றார்.அங்கு குடியிருப்பவர்கள் செல்வரத்தினத்தின் மனைவியை முழுமையாக இன்னும் பார்க்கவில்லை என மகளுக்கும் மனைவிக்கும் தெரிவித்துள்ளார்களாம்.
செல்வரத்தினத்தை விவாகரத்து செய்தால் மாத்திரமே அந்த வீட்டினை விட்டு செல்வரத்தினத்தையும் அவரது கள்ளக்காதலியையும் எழுப்பலாம் என்ற சூழ்நிலை எழுந்துள்ளதாக சட்டத்தரணிகள் மூலமாக தெரிந்து கொண்ட செல்வரத்தினத்தின் மனைவி அவரை விவாகரத்து செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். செல்வரத்தினம் தற்போது குடும்பமாக வாழ்ந்து வரும் பெண் கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த மயூரி என்ற பெயருடன் அழைக்கப்படுபவர் என்பதும் யுத்தத்தில் கணவனை இழந்து 2 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் அந்தப் பெண் கணவனை யுத்தத்தில் இழந்த பின்னரும் இன்னொருவருடன் குடும்பம் நடாத்திவந்து அவர் மூலமும் ஒரு குழந்தையும் உள்ளளது. அதன் பின்னரே அந்தக் கணவரையும் பிரிந்து வாழ்ந்து வந்தவர். 36 வயதான குறித்த பெண்ணுக்கு வாழ்வாதார உதவி செய்து வந்த செல்வரத்தினம் தற்போது அந்தப் பெண்ணுக்கு வாழ்கையை கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது குறித்த பெண்ணின் 3 பிள்ளைகளும் யாழில் உள்ள பிரபல தனியார் பாடசாலை விடுதியில் தங்கி கல்வி கற்றுவருகின்றதாக தெரியவருகின்றது.
இங்கு காட்டப்பட்டுள்ள புகைப்படம் அதே பெண் தனது தற்போதய கணவனான செல்வரத்தினத்தின் கனடா மகளின் கணவருக்கு அனுப்பிய புகைப்படமாகும். குறித்த பெண்ணின் தொலைபேசிக்கு கனடா மருமகன் பெண்ணின் நடத்தை தொடர்பாக தனது மாமாவுக்கு காட்டுவதற்காக அவளுடன் சற்றிங் செய்த போது அவளால் அனுப்பப்பட்ட புகைப்படத்தை ஊடகங்களுக்கும் அனுப்பியுள்ளார். இதனைப் பார்த்தாவாது மாமாவின் மோகம் குறையுமா? என அங்கலாய்க்கின்றார்.
இதே வேளை இவ்வாறான கனடாவில் உள்ள தமிழ் முதியவர்கள் பலரின் பாலியல் செயற்பாடுகள் கனடா தொடங்கி கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, மலையகம் வரை நீண்டுள்ளதாக கனடாவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

