புதினங்களின் சங்கமம்

திருகோணமலை கன்னியா விவகாரம்!! நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு!!

திருகோணமலை கன்னியா தொடர்பாக மேல்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த (5)ஐந்து இடைக்காலத்தடை உத்தரவுக்கோரிக்கையில் நான்கை மேல் நீதிமன்றம் ஏற்று அதற்கான தடையுத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

அதனடிப்படையில் பல்லாண்டு காலமாக இந்து மக்கள் வழிபட்டு வந்த வழிபாட்டுரிமை மற்றும் பிதிர்கடன் நடவடிக்கைளுக்கு எந்தத் தடையையும் தொல்பொருள் திணைக்களம் வழங்கமுடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிள்ளையார் ஆலயம் இருந்தாக குறிக்கப்பட்ட இடத்தில் ஆலயத்தை மீள அமைப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கி அவ்விடத்தில் ஆலயம் கட்ட அனுமதிக்க வேண்டும் என்கின்றகோரிகைகையை தவிர, மேலும் சமர்ப்பிக்கப்பட்ட நான்கு கோரிக்கைளையும் மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளம்செழியன் ஏற்றுக்கொண்டு, குறித்த பிரதேசத்தின் காணி உரிமையாளரான மாரியம்மன் ஆலய முகாமையளாரினால் முன்வைக்கப்பட்ட தடையுத்தரவு கோரிக்கைகளுக்கு ஆதரவாக நீதிமன்றம் இவ்வுத்தரவை வழங்கியுள்ளது.

திருகோணமலை மாகாண மேல்நீதிமன்றத்திற்குள்ள கிழக்கு மாகாண காணி தொடர்பான எழுத்தாணைக்கமைய இந்நடவடிக்கையை நீதிமன்றம் எடுத்துள்ளது.