காத்தான்குடியில் 18 வயது இளம் குடும்பப் பெண் கணவனால் சிறை வைக்கப்பட்டு சித்திரவதை!! நடந்தது என்ன?
இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்….
கணவனால் காத்தான்குடியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவர் சிறைபிடிக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் காத்தான்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காத்தான்குடி பொலிஸார் துரிதமாக செயற்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண்ணை பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பெண்ணிண் குடும்பத்தினர் தெரிவிக்கையில்,,
குறித்த பெண் காத்தான்குடியில் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர், இவர் சிறுவயதில் தந்தையை இழந்து தாயின் பாராமரிப்பிலேயே வளர்ந்து வந்தார். இவரின் தாயார் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று, ஊரில் உள்ள தொண்டு நிறுவனங்களின் பங்களிப்போடும் ஒருசில தாராள மனம்கொண்டவர்களின் உதவியோடும் இரத்தமும் சதையுமாக சேகரிக்கப்பட்ட நிதியில் வீடு கட்டி தனது மகளுக்கு காத்தான்குடி – 03, இஸ்மாயீல் ஹாஜியார் வீதியில் வசித்து வரும் பஸ்லின் என்பவரை 2024 ஆம் ஆண்டு திருமணம் முடித்து வைத்தார்.
திருமணம் முடித்ததில் இருந்து குறித்த பெண்ணிண் கணவரும் கணவரின் தாயும் சகோதரியும் சேர்ந்து குறித்த பெண்ணை பெண்ணின் குடும்பத்தோடு சேரவிடாமல் தனிமைப்படுத்தி பலதரப்பட்ட சித்திரவதைகளை செய்து வந்துள்ளனர்.
இதனை அறிந்துகொண்ட குறித்த பெண்ணின் தாய் ஜுவைரியா உடனடியாக வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்து காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் செய்தார். அது தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இரு தரப்பு விசாரணைகள் இடம்பெற்று சமரசம் செய்யப்பட்ட சில காலத்தின் பின்னர், குறித்த பெண்ணின் கணவர் பஸ்லின் என்பவர் குறித்த பெண்ணையும் பெண்ணின் தாயையும் நிர்பந்தித்து புதிய காத்தான்குடி மர்யம் பள்ளிவாயலுக்கு அருகாமையில் அமைந்திருந்த குறித்த பெண்ணின் வீட்டை காத்தான்குடியை சேர்ந்த அலியார் புரோக்கர் என்பவர் ஊடாக 65 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டு காத்தான்குடி – 03, இஸ்மாயீல் ஹாஜியார் வீதி தாவூத்’ஸ் ஒழுங்கையில் உள்ள அவரது தாயாரின் வீட்டில் வாழ்ந்து வந்தனர்.
இச்சந்தர்பத்தில் குறித்த பெண்ணின் கணவன் பஸ்லின் என்பரின் தாய் பரீனா மற்றும் அவரது சகோதரி கமரின் ஆகியோரினால் பலதரப்பட்ட சித்திரவதைகள் இடம்பெற்று வந்ததாகவும் இதனை வெளியில் சொல்லிவிடக் கூடாதென்பதற்காக குறித்த பெண்ணை சிறைக்கூடம் போன்ற இரும்புக் கம்பிகளுக்கு நடுவில் அடைத்து வைத்திருந்ததாகவும் காத்தான்குடி நகரசபை மற்றும் அப்பகுதி கிராம உத்தியேகத்தர் மற்றும் பொலிஸார் மற்றும் அயலவர்களின் உதவியோடு குறித்த பெண்ணை மீட்டெடுத்ததாகவும் குறித்த பெண்ணிண் தாய் ஜுவைரியா உட்பட அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.




