புதினங்களின் சங்கமம்

வைத்தியர் அர்சுனாவின் மனைவியுடன் நான் படுத்தேனா? லோஷன் பரபரப்பு பதிவு

ஊடகவியலாளர் லோஷன் வெளியிட்ட பதிவை அப்படியே இங்கு தந்துள்ளோம். ஆனாலும் இந்தப் பதிவுக்கு எதிராக வைத்தியர் அர்ச்சுனா மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டிருக்கின்றார். லோஷன் சரியான பொம்பிளைக் கள்ளன் என்று பொதுவான கருத்து சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. லோஷன் பொலிசாரிடம் முறையிடுவது சரியாக இருக்கலாம்… ஆனால் அவரது திருவிளையாடல்கள் உண்மையானதாக இருந்துள்ளது.

லோஷன் வெளியிட்ட பதிவை அப்படியே இதுதான

அன்பானவர்களுக்கும் என்னை அறியாதோருக்கும்…

வைத்தியர் ஒருவர் என்னைப் பற்றி ஏற்கெனவே இரண்டு தடவைகள் தனிப்பட்ட அவதூறு பதிவுகளை Facebookஇல் இட்டிருந்தார்.
இதைப் பற்றி என்னைச் சிலர் என்னிடம் கேட்டபோதும் – பதிலடி கொடுக்கவில்லையா என வினவியபோதும், ஆதாரமற்ற அவதூறுகளுக்குப் பதில் சொல்லி, இன்னும் விளம்பரத்தைத் தேடிக் கொடுக்கக்கூடாதென்று அமைதி காத்தேன்.

ஆனால் சட்ட ஆலோசனைகளை எடுத்து அடுத்த கட்டத்துக்காக காத்திருந்தேன்.

இப்போது, Facebook Live video ஒன்றின் பின் பரப்பப்படும் விசமக் கருத்துக்கள் எல்லை மீறி, என்னையும் என் குடும்பத்தையும் பாதிக்க ஆரம்பித்திருப்பதாக உணர்கிறேன்.
என் மீது சுமத்தப்பட்டுள்ள இந்தப் பழிகளுக்கும் தொடர்ச்சியாக செய்யப்பட்டுவரும் அவதூறுப் பிரசாரங்களுக்கு எதிராக எனது சட்டத்தரணியின் சட்டநடவடிக்கையும் இணைய வழிக் குற்ற முறைப்பாடும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இனியும் போலி அவதூறுகளும் இணைய வழிச் சீண்டல்களும் சட்டத்தால் எதிர்கொள்ளப்படும்.

இப்படியான செயற்பாடுகளால் எனது வெளிப்படையான விமர்சனங்களையும் செய்திப் பதிவுகளையும் நிறுத்தப்போவதில்லை; தொடர்வேன்.

ஆயிரம் மிரட்டல்கள் + விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறேன்.
ஆனால் அவதூறுகள், அபாண்டப் பழி சுமத்தல்களை சட்ட ரீதியாக எதிர்கொள்வதே எதிர்காலத்தில் மற்றவர்களுக்கும் ஒரு படிப்பினையாக அமையும் என்பதால் நான் தொடங்கிவைக்கிறேன்.

அன்பும் புரிந்துணர்வும் கொண்டோருக்கு நன்றி.