ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட 4 பேர் கைது!!
மஹரகமப் பகுதியில், களனி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 1.5 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 680 கிராம் ‘ஐஸ்’ (ICE) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. எந்தேரமுல்ல பகுதியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இந்த சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியிருந்தன.

