புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் இன்று அதிகாலை மேசன் ஒருவர் சடலமாக மீட்பு!!

கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்த தொழிலாளர் ஒருவர் இன்று(23) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேல் மாடி கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் நேற்று இரவு, இருவர் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் ஒருவர் நித்திரைக்கு சென்றிருந்தார்.

மற்றவர் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் அதிகாலை எழுந்து மற்றவரை காணாது தேடியபோது சடலமாக கீழே காணப்பட்டார் என பொலிசாருக்கு தெரிவித்திருந்தார்.

இச் சம்பவத்தில் யாழ் ஊர்காவற்துறையைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.