யாழ் நோக்கி வந்த சொகுசு பஸ் விபத்து!! பல பயணிகள் பலி!! இன்று அதிகாலை பயங்கரம்!!(Photos)
மதவாச்சி அநுராதபுரம் பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். ஐவர் படுகாயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் சொகுசுப் பேருந்து, எதிர்த்திசையில் பயணித்த பாரவூர்தியுடன் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்துள்ளது.
விபத்தில் 8 பேர் காயமடைந்த நிலையில், மதவாச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் மூவர் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம் – நல்லூர், திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த 12, 30 மற்றும் 53 வயதானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கல்வியங்காட்டை சேர்ந்த (தாயும் மகளும்) சதாசிவம்(சிறி) சுகி மற்றும் அஜந்தன் கோபிகா ஆகியோர் இன்று வாகன விபத்தில் அகாலமரணமடைதனர்.
யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சுகந்தி (வயது – 51), அவரின்
மகளும் கிளிநொச்சி, கரியாலை நாகபடுவான் மகா வித்தியாலய ஆசிரியையுமான அஜந்தன்
கோபிகா (வயது – 30) மற்றும் சதாசிவம் சுகந்தியின் மற்றொரு மகளான சத்யாவின் மகன்
செல்வரஞ்சன் பிமிநாத் (வயது – 12) ஆகியோரே உயிரிழந்தனர்.
உயிரிழந்த சுகந்தியின் கணவர் சதாசிவம், கோபிகாவின் இரண்டு மகள்கள், பிமிநாத்தின் தாய்
செல்வரஞ்சன் சத்யா மற்றும் பிமிநாத்தின் சகோதரர் ஆகியோரே படுகாயமடைந்தனர்.
ஜேர்மனியிலிருந்து வந்த செல்வரஞ்சன் சத்யாவின் குடும்பமும், யாழ்ப்பாணத்திலிருந்து
வாடகைக்கு அமர்த்திய தனியார் அதிசொகுசு பேருந்தில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்து
அவர்களை அழைத்துச் சென்ற உறவுகளுமே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் மதவாச்சி வைத்தியசாலையின் பிண அறையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்தில் காயமடைந்த ஏனைய ஐவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம்
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் செல்வரஞ்சன் சத்யா பலத்த காயமடைந்துள்ளார் என்று அனுராதபுரம்
வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச்
சென்றுள்ளார். தனியார் அதிசொகுசு பேருந்துச் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.










