புதினங்களின் சங்கமம்

யாழ் . சிறைக்கைதி உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.கொழும்பு 12 இல் வசிக்கும் 44 வயதுடைய நபர் ஒருவர் நீதிமன்ற உத்தரவில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.அந்நிலையில், இன்றைய தினம் சனிக்கிழமை திடீர் சுகவீனம் காரணமாக மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.