யாழ் இளைஞனின் அசுர வேகம்!! காட்டுக்குள் இழுத்துச் சென்று பலியாக்கிய மோட்டார் சைக்கிள்!!
கிளிநொச்சி – பூநகரி, பரமன்கிராய் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி – பூநகரி பொலிஸ் பிரிவிற்குப்பட்ட மன்னார், நாவற்குழி செல்லும் A-32 பிரதான வீதியில் பரமன்கிராய் பகுதியில் இன்று காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த போது,
மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
எனினும் விபத்திற்கான காரணம் தொடர்பாக பூநகரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.