வவுனியா இளம் குடும்பப் பெண்ணுக்கு மார்பில் பச்சை குத்தியது யார்? சுவிஸ் மாப்பிளை விவாகரத்து முயற்சி!!
திருமணம் முடித்து சுவிஸ்லாந்து செல்ல முற்பட்ட இளம் பெண் ஒருவரை அவரது கணவன் விவாகரத்து செய்வதற்கு ஆயத்தமாகியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் 26 வயதான வவுனியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சுவிஸ்லாந்தை வசிப்பிடமாகவும் முல்லைத்தீவை சொந்த இடமாகவும் கொண்ட இளைஞன் ஒருவரை திருமணம் முடித்துள்ளார். திருமணம் முடிப்பதற்கு முன் குறித்த இளம் பெண் பியூட்டிபார்லர் ஒன்றில் வேலை செய்து வந்ததாகத் தெரியவருகின்றது. திருமணம் நடந்து முடிந்து சுவிஸ் திரும்பிய கணவன் அங்கிருந்து இளம்பெண்ணுடன் மிகவும் அநாகரிகமான முறையில் சண்டையிடத்தொடங்கியுள்ளார். குறித்த இளம் பெண்ணின் மார்பின் மேற் பகுதியில் V என்ற ஆங்கில எழுத்து பச்சை குத்தப்பட்டிருந்ததாகத் தெரியவருகின்றது. இதனை திருமணத்தின் பின் சில நாட்களின் பின்னரே அவதானித்து பச்சை குத்தியது தொடர்பாக சந்தேகத்துடன் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார் கணவன். அந்த V என்ற ஆங்கில எழுத்தின் வலப்பக்கத்தை நீட்டி சரி என்ற அடையாளம் போல் அந்தப் பெண் மாற்றி அமைத்திருந்தது மாப்பிளைக்கு சந்தேகத்தை அதிகரித்திருந்ததாக தெரியவருகின்றது. இதன் பின்னர் சுவிஸ் செல்லும்வரை மௌனமாக இருந்த மாப்பிளை அங்கு சென்ற பின் தனது மனைவியை தொடர்ச்சியாக தகாத முறையில் ஏசி வந்ததுடன் யாரிடம் போய் பச்சை குத்தினாய்?, அவர்களின் விபரத்தை தா, ஏன் V என்ற எழுத்தை சரி என்ற குறியீடாக பின்னர் மாற்றியுள்ளாய், யாரைக் காதலித்தாய், யாருடன் படுத்தெழுந்தாய் என தொடர்ச்சியாக கேட்டு சண்டையிட்டு வந்ததாகத் தெரியவருகின்றது. இதன் பின்னர் கணவன் சுவிஸ்லாந்திலிருந்து விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் இதனையடுத்து குறித்த இளம் பெண் தனது கணவன் தொடர்பாக தொடர்ச்சியாக சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களுடன் கூடிய பதிவுகளை பிரசுரித்து வருகின்றார். இதனால் கணவனின் உறவுகளுக்கு இடையிலும் மனைவியின் உறவுகளுக்கு இடையிலும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.