புதினங்களின் சங்கமம்

இத்தாலியில் 25 வருடத்துக்கு முதல் இறந்தவரின் சடலம் யாழிற்கு வந்தது!!

இத்தாலி நாட்டில் இறந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரின் உடல் சுமார் 25
வருடங்களுக்குப் பினனர் அவரது சொந்த ஊரான சாவகச்சேரிக்கு இன்று அதிகாலை
எடுத்துவரப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த எம்.ஸ்றீபன் யோகி என்பவர் இத்தாலி
நாட்டில் தொழில் புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நோய்வாய்ப்பட்ட ஸ்றீபன்
1994ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி அவருடைய 49ஆவது வயதில் இத்தாலியில்
காலமானார்.

அப்போது இலங்கையில் போர் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த
காரணத்தினால் இறந்தவரின் உடலினை இலங்கைக்கு கொண்டுவரமுடியாத காரணத்தினாலும்
போர் எப்போது முடிவடையும் என்று தெரியாத காரணத்தினாலும் இத்தாலியில்
இருந்த உறவினர்கள் 25 ஆண்டுகளுக்கு உடலினை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை
எடுத்தனர்.

இந்நிலையில் நாட்டில் போர் நிறைவுக்கு வந்தாலும் 25 வருடங்கள்
நிறைவடையாமல் உடலினை பொறுப்பேற்பதில் சிக்கல்கள் ஏற்பட்டது. இதனால்
இறந்தவரின் மனைவி இத்தாலி நாட்டிற்குச் சென்று கணவரின் உடலினை பார்வையிட்டு
வந்துள்ளார். இந்நிலையில் 25 வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் இறந்தவரின் பூதவுடல்
இன்று அதிகாலை யாழ்ப்பாணம் எடுத்துவரப்பட்டு சாவகச்சேரியில் உள்ள அவரது
இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.