யாழில் 20 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் கைது!!
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். வளைவுக்கு அருகில் இளைஞன் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்படுவதாக பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிரடி படையினர் இளைஞனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், வவுனியா பகுதியை சேர்ந்தவர் எனவும் , இளைஞனிடம் இருந்து 20 கிலோ 175 கிராம் கஞ்சா போதை பொருளையும் மீட்டனர்.
மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருளை , கைது செய்யப்பட்ட இளைஞனையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளனர்.