முல்லைத்தீவில் மாடு மேய்த்த பாடசாலை சிறுவன் மின்னல் தாக்கிஉயிரிழந்துள்ளார்!
முல்லைத்தீவு துணுக்காய், தேராங்கண்டல் பகுதியில், கடந்த செவ்வாய்க்கிழமை 26.10.21 அன்று மாலை 14 வயது சிறுவன் ஒருவர் மின்னல் அனர்தத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளமை கிராமத்தில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மின்னல் தாக்கத்திற்க உள்ளான சிறுவனின் உடலம் மல்லாவி மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு பிரோத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.சிறுவனுடன் இருந்த நபர், சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
