புதினங்களின் சங்கமம்

மாணவிகளை வேட்டையாடிய அதிபர்!! பல மாணவிகள் பாடசாலையை விட்டுவிலகினர்!! ஒரு மாணவியுடன் பல தடவைகள் உறவு!!

நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் அதே பாடசாலையில் கடமையாற்றும் அதிபர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

6 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியொருவரே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளார்.

சந்தேக நபரான அதிபர் இந்த மாணவியைப் பல முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பாடசாலையில் கல்வி கற்கும் பல மாணவிகள் சந்தேக நபரான அதிபரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு பாடசாலையை விட்டு விலகிச் சென்றுள்ளதாக இந்த முறைப்பாட்டில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.