யாழில் ஒரு வருடத்தின் பின் கைதானா வாள் வெட்டுக் காவாலி!!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் ஒன்றின் பிரதான சந்தேக நபர் சுமார் ஒருவருட கால பகுதிக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்திருந்தார்.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகி இருந்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.