புதினங்களின் சங்கமம்

யாழில் சற்று முன் வாகன விபத்தில் பெண் பலி!! வாகனச் சாரதியை தப்ப விட்டு வேறொருவரை பிடித்த பொலிசாால் பதற்றம்!!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.

நிச்சாமம் பகுதியைச் சேர்ந்த பெண்ணே சம்பவ இடத்தில்  உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில்  சென்ற பெண்ணை வாகன மோதியதில் இந்த  உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. .

மானிப்பாய் பொலிசார் வாகனம் செலுத்தி சென்ற சாரதியை விட்டு விட்டு வீதியில் சென்ற வேறொருவரை கைது செய்து வைத்திருந்ததால் அப்பகுதியில் பெரும் பதட்ட நிலை உருவாகியிருந்தது