மீண்டும் எரிபொருள் தட்டுபாடு -மத்திய வங்கி ஆளுநரின் அதிர்ச்சி தகவல்..!
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடுப்பகுதிக்கு பின்னர், நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த தகவலை ஹிரு தொலைகாட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஒரு மாதத்துக்கு தேவையான எரிபொருளை வழங்க மட்டுமே நிதி இருக்கிறது.
ஒகஸ்ட் 15க்குப் பின்னர் எரிபொருள் வாங்க நிதியில்லை.
இந்தியா போன்ற நாடுகள் குறைந்தது 1 பில்லியன் டொலரையேனும் கடனாக வழங்கினால் மட்டுமே தட்டுப்பாடு இன்றி அடுத்த மாதத்துக்கு பின்னர் எரிபொருளை விநியோகிக்க முடியும், என அவர் கூறியுள்ளார்.

