தந்தையின் மண்டையை உடைத்த யாழில் பிரபல ஆசிரியர்!
யாழ் தொல்புரம் பகுதியில் வசித்து வரும் பிரபல ஆண் ஆசிரியர் ஒருவர் தனது தந்தையின் தலையில் பலமாகத் தாக்கியதில் படுகாயம் அடைந்த நிலையில் தந்தை யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்றைய தினம் வியாழக்கிழமை இரவு எட்டு மணி அளவில் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையிலும் பொலிசார் குறித்த இடத்துக்கு செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.