புதினங்களின் சங்கமம்

யாழில். பொலிஸ் உத்தியோகஸ்தர் என கூறி 3 இலட்ச ரூபாய் கப்பம் பெற்ற இளைஞன் கைது!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரிடம் தன்னை பொலிஸ் உத்தியோகஸ்தர் என அடையாளப்படுத்தி 3 இலட்ச ரூபாய் கப்பம் பெற்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் இளவாலை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் தன்னை பொலிஸ் புலனாய்வு பிரிவை சேர்ந்த உத்தியோகஸ்தர் என அடையாளப்படுத்தி நபர் ஒருவரை மிரட்டி 3 இலட்ச ரூபாய் பணத்தினை கப்பமாக பெற்றுள்ளார்.

பணத்தினை கொடுத்த நபர் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் , முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் இளவாலை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை நேற்றைய தினம் புதன்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.