சமுதாய டொக்டர் முரளிவல்லிபுரநாதனுக்கு விளையாட்டுக்காட்டிய தர்சினியை நட்பு வட்டத்திலிருந்து துரத்திய டொக்டர்!!
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தொடர்பாக தனது பேஸ்புக் தளத்தில் பதிவிட்ட சமுதாய வைத்திய நிபுணர் முரளிவல்லிபுரநாதனின் பதிவுக்கு எதிர்க்கருத்து தெரிவித்த ஒரு யுவதி குறித்த வைத்திய நிபுணரால் நட்பு வட்டத்தில் இருந்த நீக்கி அந்த பெண் தனது பேஸ்புக்கை பார்க்க முடியாதவாறு தடை செய்துள்ளார் முரளிவல்லிபுரநாதன் டொக்டர். இது தொடர்பாக குறித்த யுவதி தனது பேஸ்புக் பதிவில் இவ்வாறு தெரிவித்து அவரது பதிவுக்கு எதிராக தான் இட்ட கருத்தையும் ஸ்கிறீன் சொட் எடுத்து பதிவிட்டுள்ளார். அதனை அப்படியே இங்கு தந்துள்ளோம்.
வைத்தியர் முரளிவல்லிபுரநாதன் தனது பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவுக்கு நான் ஒரு கருத்தைப் பதிவு செய்தேன். பதிவு செய்து ஓரிரு நிமிடங்களில் அவர் எனது கருத்தை டிலீட் செய்துவிட்டு என்னையும் புளொக் பண்ணிவிட்டார். இவ்வாறன செயற்பாடு கொண்ட ஒரு வைத்தியர் மக்களுக்கு எப்படி நன்மை செய்வார் என நாங்கள் நம்பலாம். குறித்த வைத்தியர் தற்போது யாருக்காவது மருத்துவ சேவை செய்கின்றாரா? இவ்வாறான மருத்துவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். சமூகத்தில் தம்மை நல்லவர்கள் போல் காட்டிக் கொண்டு மிகப் பெரும் துரோகத்தை மக்களுக்கு செய்கின்றார்கள். அவரது பேஸ்புக் பதிவுக்கு நான் இட்ட கருத்தை கீழே நான் இணைத்துள்ளேன். நல்ல வேளையாக அவர் சிலவேளை எனது கருத்தை டிலீட் செய்வார் என நினைத்து நான் ஸ்கிறீன் சொட் எடுத்து வைத்திருந்ததால் அவரை ஆதாரத்துடன் அம்பலப்படுத்த முடிந்தது…..