புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசிபலன்கள் (21.07.2024)

மேஷம்

சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். நெருங்கியவர்களுக்காக சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதித்துக் காட்டும் நாள்.

ரிஷபம்

கணவன் – மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும். தொழில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

மிதுனம்

சந்திராஷ்டமம் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை உதாசின படுத்த வேண்டாம். விட்டுக் கொடுக்க வேண்டிய நாள்.

கடகம்

கடினமான வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

சிம்மம்

உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துகொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம் – பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். மனைவி வழியில் நல்ல ஆதரவு கிடைக்கும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

துலாம்

பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வீடு, வாகனத்தை சரி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் நீங்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

விருச்சிகம்

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சொத்துப் பிரச்னை ஒன்று தீரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

தனுசு

இதுவரை இருந்த அலைச்சல், டென்ஷன் கோபம் யாவும் நீங்கும். மனதில் நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

மகரம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன் – மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவது நல்லது. யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

கும்பம்

திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும் . வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். பொறுமை தேவைப்படும் நாள்.

மீனம்

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் விருப்பங்கள் நிறைவேறும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.