வவுனியா அம்மாச்சியில் ‘யூரின் பாஸ்’ பண்ண முடியாத நிலை!!
வவுனியாவில் அம்மாச்சி உணவகத்திற்கு சாப்பிடச் செல்பவர்களுக்கு, அங்கு மலசலகூட வசதி வாய்ப்புக்கள் அளிக்கப்படுவதில்லை என வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள். கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற துார இடங்களிலிருந்து வரும் பயணிகள், அம்மாச்சியில் சுவையான மற்றும் தரமான உணவு வழங்கப்படுகின்றது என அறிந்து, சாப்பிடுவதற்காக அங்கு வருகின்றார்கள். ஆனால் அங்கு வரும் பயணிகளின் இயற்கை உபாதைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, மலசலகூட வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என பயணிகள் குற்றம் சாட்டுகின்றார்கள். அம்மாச்சியில் உள்ள மலசலகூடம் நிரம்பி வழிகின்றது எனவும் அதனால் பயணிகளை அங்கு பயண்படுத்த விடுவதில்லை எனவும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மாத்திரமே மலசலகூடத்தை பயண்படுத்த அனுமதிக்கப்படுவதாகவும், உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.