புதினங்களின் சங்கமம்

யாழ் , மட்டக்களப்பைச் சேர்ந்த இருவர் உட்பட்ட நால்வர் கொரோனாவால் மரணம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்றிரவு அறிவித்துள்ளார்.

யாழ். உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த, 81 வயதான பெண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில், கொரோனாத் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று நிகழ்ந்துள்ளது.

வாகரைப் பிரதேசத்தைச் சேர்ந்த, 76 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொரோனாத் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்றுமுன்தினம் நிகழ்ந்துள்ளது.

அக்குரணை பிரதேசத்தைச் சேர்ந்த, 57 வயதான ஆண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில், கொரோனாத் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று நிகழ்ந்துள்ளது.

ராகமை பிரதேசத்தைச் சேர்ந்த, 62 வயதான ஆண் ஒருவர், வெலிசறை காச நோய் வைத்தியசாலையில், கொரோனாத் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று நிகழ்ந்துள்ளது.

இதன்படி கொரோனாத் தொற்றால் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 511 ஆக அதிகரித்துள்ளது.