யாழ் போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி பிரணவன் சேர் பிணத்தை வைத்து உழைப்பவனா? அதிர்ச்சித் தகவல்கள்!!
மதிப்புக்குரிய யாழ்ப்பாண சட்டவைத்திய அதிகாரி பிரணவன் சேர் அவர்களே…. சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினையே இங்கு நாம் தந்துள்ளோம்… ஆகவே நீங்கள் ஓடிப்போய் எனக்கு எதிராக வம்பன் இணையத்தளத்தில் பதிவு போட்டிருக்கின்றார்கள் என முறையிட வேண்டாம்… பொலிசார் எப்படித் தேடினாலும் வம்பனைக் கண்டு பிடிப்பது கஸ்டம்…. வம்பன் டொக்டர் அருச்சுனாவைப் போல் துணிச்சல் இல்லாதவன்…. உரும்பிராய் ரகுராம் போல உங்களுடன் மோதுவதற்கு தைரியம் இல்லாதவன்…ஆகவே இங்கு தரப்படும் பதிவிற்கான எதிர்வினையை அப்பாவி வம்பன் இணையத்தளத்துக்கு எதிராக பாவிக்கமாட்டீர்கள் என எண்ணுகின்றோம்…. ஏற்கனவே ஊடகவியலாளர்கள் பலரை நீங்கள் நீதிமன்றம் வரை கொண்டு சென்று அச்சுறுத்தியுள்ளதாக அறிகின்றோம்….
ஏற்கனவே கல்வியங்காட்டில் சிறுமி ஒருவர் துாக்கில் தொங்கிய சம்பவத்தில் சிறுமி வல்லுறவுக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்டாள் என பலரும் சந்தேகித்து குறித்த சிறுமி வேலைக்காரியாக இருந்த பணக்கார குடும்பத்திடம் லட்சக்கணக்கான பணம் வாங்கியதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்ட வேளை அதை வெளியிட்ட ஊடகத்தையும் ஊடகவியலாளர்களையும் பொலிஸ் விசாரணை, நீதிமன்ற வழக்கு என இழுத்த வரலாறு பலருக்கும் தெரியும்.ஆகவே நாங்கள் உங்களைப் பற்றி எழுதுவதற்கு பயப்படுகின்றோம். மற்றவர்களுடையதை மட்டும் இங்கு நாம் பிரசுரித்துள்ளோம்…
JMO Report
JMO என்றால் யார்?
JMO உடைய கடமையும் பொறுப்புகளும் எவை?
JMO வைத்தியர்கள் ஊழல் செய்ய வாய்ப்புகள் உள்ளதா?
(இது Call me as a Sir என்ற Dr. பிரணவன் அவர்களை தாக்குவது அல்ல. இது வரையில் நான் Dr. பிரணவன் அவர்களை Role செய்ததும் இல்லை)
Judicial Medical Officer (JMO) எனப்படும் சட்ட வைத்திய அதிகாரி உடைய கடமைகள் சிலவற்றை பார்க்கலாம்.
குறிப்பாக Postmortem Examination எனப்படும் உடற்கூற்று பரிசோதனை மிகவும் பிரதான கடமையாகும்.
குறிப்பாக ஒருவர் கொலை செய்யப்பட்டால் அவரின் கொலைக்கு நீதி கிடைப்பதற்கு உரிய மிக மிக முக்கிய ஆவணம் Postmortem Report எனப்படும் உடற்கூற்று பரிசோதனை அறிக்கையே ஆகும்.
இந்த Postmortem Report அடிப்டையிலும் நீதிபதி அவர்கள் அதிகம் கவனம் செலுத்துவார்.
அவற்றை தாண்டி தற்கொலையா, கொலையா என்ற சந்தேகங்களையும் இந்த Postmortem Report முடிவு செய்யலாம்.
குறிப்பாக சில வேளைகளில் கொலையை தற்கொலையாகவும் மாற்றப்பட்ட Postmortem Report என்ற வகையிலும் வரலாறு உலகில் உள்ளது.
அடுத்து
கணவன் மனைவி அடிபாடு சண்டையில் வைத்தியசாலை சென்று பின்னர் நீதிமன்றம் போனாலும் தீர்வுக்கு அங்கே JMO Report செல்வாக்கு செலுத்தும்.
பாடசாலைகளில் நடைபெறும் ஆசிரியர், மாணவர் வன்முறை, அடிதடி சண்டை என்று நீதிமன்றம் போகும் போதும் இந்த JMO Report தான் தீர்ப்புக்கு செல்வாக்கு செலுத்தும்.
சில வீதி விபத்துகள் தொடர்பான நீதிக்கும் இந்த JMO Report அவசியம்.
இவ்வாறு பல சட்ட நடவடிக்கைகளுக்கு JMO Report அவசியாமாக இருக்கும்.
ஆகவே சின்ன சின்ன சண்டைகள் முதல் கொலைகள் வரையான தீர்ப்புகளுக்கு JMO Report உடைய வகிபாகம் என்பது அளப்பரியது.
இதே இடத்தில் தான் சில சம்பவங்களுக்கு உரிய JMO Report தவறு என்றோ, அல்லது பக்கச்சார்பு என்றோ சிலர் கருதி வாதிடுவதும் உண்டு.
அது போக,
யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் கொலை போன்ற குற்றவியல் சம்பவங்கள் மூலமான இறப்பு அல்ல சாதாரண/ இயற்கையான இறப்பிற்கும் பிரேத பரிசோதனை மற்றும் இறந்தவரின் உடலை விரைவில் கொடுப்பதாக இருந்தால் ஊழல் வாங்கபடுவதாக Dr. Ramanathan Archchuna அவர்கள் வைத்த குற்றசாட்டு தான் நாடு பூராகவும் பாரிய அதிர்ச்சியை கொடுத்தது.
அந்த வகையில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதற்கு சாத்தியம் உள்ளதா என்று கேட்டால். ஆம் என்றும் கூறலாம்.
ஆதாரம் உள்ளதா என்று கேட்டால் தான் சிக்கல் ஆகும். அத்தாவது ஊழல்/ லஞ்சம் போன்றவற்றை இலகுவாக அடையாளம் கண்டு கொண்டாலும் உறுதிப்படுத்த முடியாது. அதிகாரிகள் நேரடியாக பணம் வாங்க மாட்டார்கள். குறிப்பாக அதற்கு உரிய ஆட்கள் இருப்பார்கள். அதிலும் லஞ்ச பணத்தை நாங்கள் அவர்களது வங்கி கணக்கில் வைப்பு செய்ய முடியாது. தந்திரமாக நேரடியாக கைகளில் தான் பண பரிமாற்றம் நடக்கும்.
எனக்கு தெரிந்தும் அவ்வாறான லஞ்ச பணம் கொடுத்த சம்பவம் உண்டு. ஆனால் அவற்றை ஆதரங்கள் இருக்கா என்று கேட்டால் இல்லை என்பதால் தான் அவற்றை வெளியே கூறி சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது உள்ளது.
ஒரு சிறுமியின் நீரில் மூழ்கி இறந்த விபத்து மரணம் ஒன்றுக்கு 5 லட்சம் (500,000) வரை லஞ்சம் கொடுத்தாகவும் ஓர் சம்பவத்தை நான் அறிந்தேன்.
அங்கே பெற்றோர்கள் கொலையாக இருக்கும் என்று சந்தேகப்படவில்லை. ஆனாலும் உடலில் காணப்பட்ட ஒரு சிறு காயத்தின் அடிப்படையில் JMO Report நீதிமன்றத்திற்கு அனுப்பி நீதிமன்ற உத்தரவை பெற்று தான் இறந்த உடலை உறவினரிடம் கொடுக்கலாம் என்ற நிலையும் இருந்தது. ஆனால் அதை நீதிமன்ற உத்தரவிற்கு செல்வதா இல்லையா என்பதை தீர்மானிப்பது அந்த JMO Report தான் ஆகும்.
ஏன் அந்த 5 லட்சம் என்பது இப்போது புரிந்து இருக்கும். வசதியான வீட்டுக்காரர் என்பதையும் அங்கே குறி வைக்கப்பட்டது. அவர்கள் நீதிமன்ற உத்தரவு என்பதை பெறுவதற்கு மினைகேடு என்றும் கருதினார்கள்.
இதே போல் பல சம்பவங்கள் நடக்கலாம், நடக்காமலும் போகலாம்.
எனவே Dr. அச்சுனா கூறிய குற்றச்சாட்டை விசாரித்து நீதித்துறை முடிந்த வரை உண்மை/ நீதியை வெளிப்படுத்த வேண்டும்.
உங்கள் கருத்துகளையும் கூறுங்கள்.
தொடர்ந்து பேசுவோம்
வாருங்கள்
த. கிருஷ்ணா
13.07.2024