புதினங்களின் சங்கமம்

இலங்கையில் பெரும் சோகம்!! சடலமாக மீட்கப்பட்ட சகோதரிகள்!!

அக்கரப்பத்தனை பிரதேசத்தில் வெள்ளநீரில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த பாடசாலை மாணவிகளில் இரண்டாவது மாணவியும் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று முதல் பெய்து வரும் அடை மழையினால் அக்கரபத்தனை பொலிஸ்பிரிவிற்குட்ட பகுதியில் இரண்டு மாணவிகள் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு மாணவியை தேடும் பணி இரண்டாவது நாளாகவும் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

டொரிங்டன் பாடசாலையில் தரம் 07 கல்வி கற்கும் இரண்டை சகோதரிகளான 12 வயதுடைய மதியழகன் லெட்சிமி, மதியழகன் சங்கீதா ஆகிய மாணவிகளே பாடசாலை விட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் ஆற்று நீர் பாதையில் பெருக்கெடுத்துள்ளது.

இதனால் பாதையை கடக்க முற்பட்ட போது நேற்று மாலை நீரில் அடித்துச்செல்லப்பட்டனர்.

இதில் மதியழகன் சங்கீதா என்ற மாணவி நேற்றுவரை காண்டு பிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட தேடுதலின்போது குறித்த மாணவி சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். மாணவியின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை டொரிங்டன் தமிழ் வித்தியாலயத்தின் கற்பித்தல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்தனர்.