வவுனியாவில் பேரூந்து மோதி இளம் தம்பதிகளுக்கு நடந்த கொடூரம்!!
வவுனியாவில் வீதி ஒழுங்கை கடைப்பிடிக்காத அரச பேருந்து
ஒன்று, மோட்டார் சைக்கிளில் எதிர் திசையில் வந்த இளம் தம்பதியொன்றை
பந்தாடியது. தெய்வாதீனமாக அவர்கள் காயங்களுடன் தப்பித்தனர்.
வேப்பங்குளம் பகுதியில் இன்று காலை 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.
வேப்பங்குளத்திலுள்ள வீட்டிலருந்து மோட்டார் சைக்கிளில் இளம்
தம்பதியொன்று நகர் நோக்கி பயணமானது. வேப்பங்குளம் 5ம் ஒழுங்கை பகுதியில்,
எதிரில் வந்த கார் ஒன்றை முச்சக்கரவண்டியொன்று கடந்து வந்தது. அதே
சமயத்தில், இ.போ.ச பேருந்தும் கார், முச்சக்கரவண்டியை கடந்தது.
இதனால் எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் தம்பதியை பேருந்து மோதி தள்ளியது.
விபத்தில் 30, 25 வயதுடைய கணவன் மனைவி ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

