மெல்ல மெல்ல பேஸ்புக் சந்திரமுகியாக மாறும் சாவகச்சேரி முன்னாள் வைத்திய பொறுப்பாளர் அர்ச்சுனா!!
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடந்த மாத நடுப்பகுதியில் இருந்து வைத்தியசாலை பொறுப்பதிகாரியாக கடமையை ஏற்ற இராமநாதன் அர்ச்சுனா செய்த துணிச்சலான காரியங்கள் சிலவற்றால் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றார். திரைப்படங்களில் வரும் கதாநாயகர்களின் தோற்றம் மட்டுமல்ல அவர்கள் மேற்கொளும் மக்களைக் கவரக்கூடிய செயற்பாடுகள் போன்றவற்றையும் சிறந்த விளக்கக்காட்சிகளாக (presentation) தனது பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார்.
சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையில் காணப்பட்ட பாரிய குறைபாடுகள் தொடர்பாக ஏற்கனவே அப்பகுதி மக்களுக்கு பெரும் விசனம இருந்துள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலை ஏன் செயற்படு அற்ற நிலையில் உள்ளது? யார் இதற்கெல்லாம் காரணம் என தனது சிறப்பான, துணிவான, நியாயமான செயற்பாட்டால் தனக்குச் சொந்தமான சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார் குறித்த வைத்தியசாலை பொறுப்பதிகாரி அர்ச்சுனா. ஏற்கனவே சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பாக பெரும் விரக்தியில் இருந்த அப்பகுதி மக்களுக்கு, அதே வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி தெரிவித்த கருத்துக்கள் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், அப்பகுதி மக்கள் மட்டுமல்ல, யாழ்ப்பாண மக்கள் மட்டுமல்ல, உலகம் எங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்களையும் அர்ச்சுனாவுக்கான ஆதரவு அலையாக கிளர்ந்தெழச் செய்தது. அத்துடன் அர்ச்சுனாவின் தந்தையின் பின்புலமும் அதில் சேர அர்ச்சுனா தங்களுக்காக தன்னையே அர்ப்பணிக்கும் இன்னொரு தலைவன் என்ற நிலைக்கு தற்போது கொண்டு சென்றுள்ளது.
இந் நிலையில் அர்ச்சுனாவுக்கு எதிராகச் செயற்பட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் அரச வைத்திய உயரதிகாரிகள் போன்றவர்கள் அர்ச்சுனா மீது வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு அவர் சமூகவலைத்தளங்களுக்கு அடிமையானவர் என்றும் அவர் தளம்பல் மனநிலையில் உள்ளவர் என்பதே ஆகும். இவ்வாறாநன நிலையில் கடந்த 4 நாட்களுக்குள் அர்ச்சுனாவுக்கு சொந்தமா பேஸ்புக் பக்கத்தை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பின்தொடரத் தொடங்கியுள்ளார்கள். அத்துடன் கிட்டத்தட்ட ஒவ்வொரு அரை மணித்தியாலத்திற்குள் நள்ளிரவு தண்டியும், அர்ச்சுனா தனது பேஸ்புக்கில் பதிவுகளை இட்டு வருகின்றார். இவ்வாறான செயற்பாடு அவர் பேஸ்புக்கில் வரும் விருப்புக்கள் மற்றும் கருத்துக்களுக்கு அடிமையாகி விட்டார் என்றே தோன்றுகின்றது.
அர்ச்சுனாவுக்கு எதிரா யாராவது தமது பேஸ்புக்குகளிலோ அல்லது வேறு சமூகவலைத்தளங்களிலோ கருத்துக்கள் வெளியிட்டால் அவற்றுக்கு எதிராகவும் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்துக்க இட்டு வருவது அவரை சிறந்த ஆற்றல் உள்ளவர் என எண்ணிய பலரையும் வெறுப்புக்கு உள்ளாக்கியுள்ளது. அர்ச்சுனா தொடர்பாக அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் ஏனைய எதிர்த்தரப்புக்களும் கூறும் தகவல்கள் உண்மையா என சிந்திக்க வைக்கின்றது. அர்ச்சுனாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் அவரது நண்பர்கள் இது தொடர்பாக அவருக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
அருச்சுனாவுக்கு ஆதரவாக பாராளுன்றில் கதைத்த சைக்கிள் கட்சி கஜேந்திரன் மற்றும் அருச்சுனாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ள டக்ளஸ் ஆகியோர் இவருக்கு ஆலோசனைகளைக் கூற வேண்டும். அருச்சுனா இவ்வாறு தொடர்ச்சியாக சகட்டு மேனிக்கு பதிவுகளைப் பொழிந்து தள்ளுவராக இருந்தால் அவர் சமூகவலைத்தளங்களுக்கு அடிமையான ஒரு மனிதன் என உறுதிப்படுத்தலாம்.