யாழில் உயிரைப் பறிக்க காத்திருக்கு மரணப் பொறி!! (video) மக்களே அவதானம்!!
யாழ்.நகரப் பகுதியில் உள்ள பிறவுன் வீதி முதலாம் ஒழுங்கையையும், அன்னசத்திர வீதியையும் இணைக்கும் ரயில் கடவை மரண பொறியாக மாறிவருகின்றது. குறித்த இடத்தில் ரயில் கடவை அமைக்கப்பட்டுள்ள போதும் எச்சரிக்கை ஒலியோ அல்லது ஒளியோ இல்லாத நிலையில் வெறுமனவே தடை மட்டும் போடப்பட்டுள்ளது.
இதனால் அவ்வீதியை பயன்படுத்துபவர்கள் ரயில் விபத்தில் சிக்கிக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக உயரதிகாரிகள் எந்தவித அக்கறையும் இன்றிக் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.