புதினங்களின் சங்கமம்

ஊசி போடுவதற்கு பயந்து வவுனியா வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியவர் வாகனம் மோதி பலி!! நடந்தது என்ன?

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றவர் வீதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, கோவில்புதுக்குளம், ராணிமில் வீதி சந்திப் பகுதியில் 29 ஆம் திகதி இரவு குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வவுனியா, ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த லியோசியஸ் டெல்சன் என்பவர் வைத்தியசாலையில் ஊசி போடுவதற்கு பயந்து வைத்தியசாலையில் இருந்து விடுகை பெறாது இரவு தப்பி வீடு நோக்கி சென்றுள்ளார்.

இந்நிலையில் வவுனியா, கோவில்புதுக்குளம், ராணிமில் சந்தியில் மரணமடைந்த நிலையில் சடலம் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் அச் சடலத்தை மீட்டனர். வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தர்.

வீதியில் சென்ற வாகனம் குறித்த நபர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் இதன் காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்தும் வவுனியா பொலிஸார் மற்றும் போக்குவரத்து பொலிஸார் ஆகியோர் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x