புதினங்களின் சங்கமம்

யாழில் டிப்பர் மோதி படுகாயமடைந்திருந்த பாலச்சந்திரன் மரணம்!!

யாழ்ப்பாணம் மந்திகை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – டிப்பர் வாகன விபத்தில் , படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

துன்னாலை வடக்கை சேர்ந்த நாகசார பாலச்சந்திரன் (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானர்.

விபத்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.