புதினங்களின் சங்கமம்

யாழ் தாவடி சிவானந்தனையும் காப்பாற்றியது ஜேசுவே!! சுவிஸ் போதகர் கூறினாராம்!!

சுவிஸ் போதகரால் கொரோனா தொற்றுக்குள்ளாகிய சிவானந்தனையும் ஜேசுவே காப்பாற்றியதாக கதை அளந்துள்ளார் சுவிஸ் போதகர். யாழ்ப்பாணத்தில் உள்ள தனது கிறீஸ்தவசபை உறுப்பினர்களை பெரிய வெள்ளி தினத்திற்குப் பின்னர் வைபர் ஒன்லைன் மூலம் சந்தித்து ஆசீர்வாதம் வழங்கிய போதே சுவிஸ் போதகர் இவ்வாறு பீலா வி்ட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இது தொடர்பாக அந்த சபையைச் சேர்ந்த விசுவாசிகள் குறித்த போதகரின் வீடியோக்களை தமது சபையைச் சேர்ந்தவர்களுக்கு பகிர்ந்து வருவதாகவும் அத்துடன் குறித்த சபையைச் சேர்ந்தவர்கள் தமது பிரார்த்தனைகளாலேயே சுவிஸ்போதகர் மற்றும் சிவானந்தனும் உயிர் பிழைத்ததாக கூறி வருகின்றனராம்.

தமது கிறீஸ்தவ சபை எந்த ஒரு சமயத்தவர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல என்றும் சைவசமயத்தைச் சேர்ந்த சிவானந்தனுக்கும் சேர்த்தே தாம் பிரார்த்தனைகளை மேற்கொண்டு அவரையும் உயிர் பிழைக்க வைத்ததாக குறித்த சபையைச் சேர்ந்த விசுவாசிகள் தமக்கு நெருக்கமானவர்களுக்கு தெரிவித்து வருகின்றார்களாம்.