புதினங்களின் சங்கமம்

யாழ் வலயக் கல்வி அலுவலகத்தில் பதவி ஏற்பில் குரங்கு வேலை பார்த்த பிரட்லி..

யாழ் வலயக் கல்விப் பணிப்பாளராக நேற்று பதவி ஏற்ற பிரட்லி தனது அலுவலகத்தில் இருந்த இந்து தெய்வங்களின் படங்களை அகற்றியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது யாழ் வலயக் கல்வி பணிப்பாளராக இருந்த பொன்னையா இரவிச்சந்திரன் பணி ஓய்வு பெற்ற நிலையில் அவரது இடத்திற்கு வலிகாம வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய பிரட்லி யாழ் வலயத்திற்கு நியமிக்கப்பட்டார்.

இன் நிலையில் இதுவரை காலமும் யாழ் வலயக்கல்விப் பணிப்பாளரின் அலுவலகத்தில் காணப்பட்ட இந்து கடவுள்களின் படங்களை அவர் அகற்றியுள்ளார்.

இன் நிலையில் குறித்த விடையம் வடமாகாண கல்விச் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மீண்டு படங்கள் உரிய இடத்தில் வைக்கப்பட்டன.