புதினங்களின் சங்கமம்

நுவரேலியா பேரூந்து தரிப்பிட மலசலகூடத்திலிருந்து இருவரது சடலங்கள் மீட்பு!!

நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பீடத்தில் உள்ள பொது மலசலகூடத்தில் இருந்து இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று புதன்கிழமை (26) இரவு நுவரெலியா பிளாக்பூல் ருவன்எலியாவைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவர் ஒருவரின் சடலமும் இன்றைய தினம் (27) ஆரியபுர பொகவந்தலாவையை சேர்ந்த 51 வயதுடைய ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மலசலகூடத்தில் இவர்கள் விழுந்து கிடந்ததை அவதானித்த பொது மக்கள் 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்கு தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நோயாளர் காவு வண்டியின் முதலுதவியலாளர்கள் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தினர்.

முதியவரின் உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டதை அடுத்து நுவரெலியா மரண விசாரணை அதிகாரியின் உத்தரவின் பேரில் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மரணங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x