நெடுந்தீவில் பயங்கரம்- 22 வயது அமல்ராஜ் இன்று அதிகாலை அடித்துக்கொலை!!
நெடுந்தீவில் இளைஞன் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 1.30 மணியளவில் இச் சம்பவம் வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இதன்போது 6 ஆம் வட்டாரத்தை சேர்ந்த அமல்ராஜ் (வயது-22) என்ற இளைஞனே கொலைசெய்யப்பட்டுள்ளார். மேலதிக தகவல்கள் விரைவில்
இருவருக்கிடையே காணப்பட்ட முற்பகை காரணமாக நேற்று இரவு மது போதையில் வாய்தர்க்கம் இடம் பெற்றதாகவும் அதன் பின்னர் குறித்த கொலை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொலை செய்யப்பட்டவர் அடி அடிகாயங்களுடன் சடலமாக. இன்று (20) அதிகாலை மீட்கப்பட்டு அதன் பின்னர் நெடுந்தீவு வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டது.
கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


