புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

அமெரிக்காவில் புலம்பெயர் தமிழர்களின் பல மில்லியன்டொலர்கள ஏமாற்றி ஓடித்தப்பிய மட்டக்களப்பு சிவராமன்

  மில்லியனுக்கு அதிகமான டொலர்களை கையாடல் செய்து அமெரிக்காவில் தலைமறைவாகிய மட்டக்களப்பு நபர்!

புலம்பெயர் நாடுகளை பொறுத்தவரையில் தமிழர்கள் பெரும்பாலும் ‘சீட்டு’ எனும் சேமிப்பு முறையை பல காலமாக செய்துவருகின்றனர். நம்பிக்கையின் அடிப்படையில் நண்பர்கள் , உறவுகள் ஒரு குழுவாக சேர்ந்து மாதாந்தம் குறித்த ஒரு தொகையை ‘சீட்டு’ பிடிக்கும் நபரினூடாக வழங்கி தேவையேற்படும் காலத்தில் அதை மொத்தமாக பெற்றுக்கொள்வது வழமை.

அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் ஏதோ ஒரு பெரிய தேவையொன்றை பூர்த்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் மேற்கொள்ளப்படும் சேமிப்பாகவே ‘சீட்டு’ பார்க்கப்படுகின்றது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் பல வருட காலமாக வசித்துவந்த மட்டக்களப்பை சேர்ந்த #நந்தன்_சிவராமன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்துள்ள நிலையில் பல வருட காலமாகவே பல தமிழர்களை ஒன்றிணைத்து ஒருவரை மற்றொருவர் அறியாவண்ணம் ‘சீட்டு’ பிடிப்பதை தொழிலாக செய்து வந்துள்ளார் என அறியக்கிடைக்கின்றது.

ஒரே நேரத்தில் பல சீட்டுக்களை பல நபர்களை ஒன்றிணைத்து பிடித்து வந்துள்ள நிலையில் கடந்த மாதம் மில்லியனுக்கும் அதிகமான டொலர்களுடன் குடும்பத்தினருடன் தலைமறைவாகியுள்ளார் எனவும் அறியக்கிடைக்கின்றது.

#குறிப்பு : நானறிந்த நெருங்கிய உறவுகள் இருவர் 60,000 டொலர்கள் இந்த நபரால் ஏமாற்றப்பட்டுள்ளனர்; அத்துடன் இதுவரை 90க்கும் அதிகமான தமிழர்கள் மில்லியன் வரையான டொலர்களை இழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவனால் பாதிக்கப்பட்ட நபர்களில் ஓரிருவர் பாரிய தொகையினை இழந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தற்கொலைக்கு முயன்று உறவினர்களினால் காப்பாற்றப்பட்டதாகவும், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்தது.

இவன் பற்றிய தகவல் அறிந்தவர்கள் உள்பெட்டியில் தெரிவிக்கவும்.

#பகிரவும்.