Home புதினங்களின் சங்கமம் யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவனுக்கு விளக்கமறியல்..!

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவனுக்கு விளக்கமறியல்..!

நேற்றைய தினம் அராலியில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகாயத்தை ஏற்படுத்திய கணவன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த கணவன் – மனைவி ஆறு வருடங்களாக பிரிந்து இருக்கின்றனர். இந்நிலையில் வன்னியில் வசிக்கும் மனைவி, யாழ்ப்பாணம் – அராலியில் உள்ள அவரது அக்காவின் வீட்டிற்கு வந்து செல்வது வழமை.

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான பெண், புது வருட கொண்டாட்டத்திற்காக சகோதரி வீட்டுக்கு வந்திருந்த நிலையில் கணவனால் இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.


Previous articleஅவுஸ்ரேலியா சென்றுவிட்டு கொழும்பில் உள்ள வீட்டுக்கு வந்த டொக்டர் கண்ட அதிர்ச்சிக் காட்சி!! வெளிநாடு செல்வோர் அவதானம்!!
Next articleபிரான்ஸில் வவுனியா தமிழ்க் குடும்பப் பெண்ணின் அந்தரங்க காட்சிகள் இணையத்தளங்களில்! கசியவிட்டது கணவனா?