யாழ் நல்லுார் சொக்கன் கடையில் கத்தி காட்டி களவெடுக்க முயன்ற கொள்ளையனை பிடித்து துவைத்த பொதுமக்கள்!! (Photos)
அதேபோல் இன்று(04) காலை யாழ்.மாம்பழச் சந்தியில் உள்ள புத்தக கடையொன்றினில் நுழைந்து அங்கு நின்ற பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து திருட முற்பட்டுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகில் நின்றவர்கள் கடைக்குள் ஓடினார்கள்.
அதனைப் பார்த்த திருடன் தப்பியோடியுள்ளார். பின்னர் இதேபோல் சொக்கன் உணவகத்துக்குள்ளும் நுழைந்து திருட முற்பட்டபோது மக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த திருடன் எந்த நேரமும் அழுக்கான உடையுடன் யாழ்.நகர் வீதிகளில் நடந்து செல்வதாகவும் மனநலம் பாதிக்கப்பட்டது போல் உலாவுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

