விளக்கமறியலில் கெஹலிய: அவர் வகித்த அமைச்சின் சொகுசை அனுபவிக்கும் குடும்பம்!!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் வைக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டது.
எவ்வாறாயினும், அவர் அமைச்சராக இருந்த போது வழங்கப்பட்ட இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்களும் இன்னும் அவரது குடும்ப உறுப்பினர்களால் பயன்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், விஜேராம மாவத்தையில் அவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் ஏன் இதுவரை கையளிக்கப்படவில்லை என அந்த அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
அரச உத்தியோகத்தர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டால், அவர் பெற்றிருந்த அனைத்து சலுகைகளும் உடனடியாக ரத்து செய்யப்படும். ஆனால், கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு ஏன் விசேட கவனம் செலுத்துகின்றனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹலியவின் குடும்ப உறுப்பினர்கள் அதே உத்தியோகபூர்வ வாகனங்களில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு வருவதாகவும் அந்த அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.
தரமற்ற ஊசி மருந்துகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கான பிணையை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் தொடர்ந்து நிராகரி வருகிறது.
குற்றச்சாட்டுகள் தொடர்பாக தெளிவான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதால் இவருக்கான பிணை நிராகரிக்கப்படுவதுடன், எதிர்வரும் 22ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

