புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசிபலன்கள் (11.09.2024)

மேஷம்

சந்திராஷ்டமம் இருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லை என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் போராட வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சனை வரக்கூடும். பொறுமை தேவைப்படும் நாள்.

ரிஷபம்

உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். நட்பு வழியில் நல்லசெய்தி கேட்பீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் அதிகாரி உங்கள் புதிய முயற்சியை பாராட்டுவார். நன்மை நடக்கும் நாள்.

மிதுனம்

எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.

கடகம்

குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

சிம்மம்

திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை உணர்வீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

கன்னி

சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் அனுபவ மிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.

துலாம்

குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். விலை உயர்ந்தப் பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடியான மாற்றம் உண்டாகும் நாள்.

விருச்சிகம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. யாரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். நிதானம் தேவைப்படும் நாள்.

தனுசு

மறைமுக விமர்சனங்களும் எதிர்காலம் பற்றி பயம் வந்துநீங்கும். உறவினர் நண்பர்களால் சங்கடங்கள் வரும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். தன்னம்பிக்கை தேவைப்படும் நாள்.

மகரம்

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் கடமை உணர்வுடன் செயல்பட தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.மகரம்

கும்பம்

தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய உறவினர் நண்பர்கள் மனம் விட்டு பேசுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மீனம்

புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்களை வாங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். மனசாட்சிபடி செயல்பட வேண்டிய நாள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x