புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பு செருப்புக்கடை முதலாளியும் நானும்!!

அண்மையில் மகனுக்கு செருப்பு வாங்க மட்டக்களப்பு நகரிலுள்ள நமது தமிழ் நண்பர் ஒருவரின் கடைக்கு சென்றிருந்தேன். கடை முதலாளியான நண்பர் கல்லாவில் உட்கார்ந்து இருந்தார். கடை பையனிடம் மகனுக்கு தரமான இந்திய தயாரிப்பு செருப்பு காட்டும்படி கேட்டேன். பையன் ஒரே வார்த்தையில் ‘இந்திய செருப்பு ஏதுமில்லை ‘என்று கூறிவிட்டு வேறு எங்கோ பராக்கு பார்த்துக் கொண்டிருந்தான்.வேறு ஏதாவது செருப்பையாவது காட்டுவான் என சிறிது நேரம் காத்திருந்த போதிலும் அவனுக்கு அவ்விதமான நோக்கம் ஏதும் இல்லை என புரிந்தது. முதலாளியான நண்பரையும் கல்லாவில் காணவில்லை.
அப்படியே பாலத்தை கடந்து எமது சக இன நண்பர் ஒருவரின் கடைக்கு சென்று அதே போல் கேட்டதுபோது, பையன் பதில் சொல்லுமுன் கல்லாவில் இருந்து இறங்கி வந்த கடை முதலாளி,இப்போது இந்திய தயாரிப்பு செருப்புக்கள் வருவதில்லை என்று விளக்கம் கூறியதோடு, நமது DSI செருப்புகளின் சிறப்புங்களை கூறி பல மாதிரிகளையும் காட்டி மகனுக்கும் கூடவே எனக்கும் என இரண்டு சோடி செருப்புக்களை விற்பனை செய்தார்.
வரும் போது நமது நண்பரின் கடையில் நிறுத்தி,வாங்கிய செருப்புக்களை காட்டி ‘நாங்கள் உங்கள் கடைகளுக்கு வருவதில்லை ‘என்று கூறுவதை நிறுத்தி இனியாவது வியாபார யுக்திகளை கற்றுக்கொள்ளுங்கள் என அறிவுரை கூறிவிட்டு வந்தேன்.

நன்றி

David Prem facwbook