யாழ் ஆண்களும் அவதானம்!! யாழில் ஆண் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்தவர் பிடிபட்டார்!!
யாழ் கொழும்புத்துறைப் பகுதியில் ஆண் ஒருவர் குளிப்பதை தொலைபேசியில் மறைந்திருந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்த ஒருவன் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். நிறுவனம் ஒன்றில் விற்பனைப் பிரதிநிதியாக கடமையாற்றும் ஒருவனே இவ்வாறு பொதுமக்களால் பிடிக்கப்பட்டான். பிடிபட்ட அவனது தொலைபேசியை ஆராய்ந்த போது ஏராளமான ஆண், பெண்களின் குளியல் காட்சிகள் காணப்பட்டதாக தெரியவருகின்றது. இதனையடுத்து குறித்த நபர் யாழ்ப்பாணப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

