யாழ் வர்த்தகர், ஊடகவியலாளர் என கூறப்படும் குணசீலன் கொழும்பில் ஜல்சாவுக்கு முயன்றாரா? நகைகள் கொள்ளை!!
யாழ்ப்பாண வர்த்தகர், ஊடக ஒப்புநோக்குனர், ஊடக வகுப்புக்களை நடத்துபவர் என கூறப்படும் சோமு குணசீலன் மனைவியுடன் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு சென்றுள்ளார். கொழும்பில் வைத்து மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்டு அவர் கையிலுள்ள மோதிரம் பணம் என்பவை கொள்ளையிடப்பட்டுள்ளன. இவ்வாறு செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனாலும் குணசீலன் கொழும்பில் மனைவியை பிரசவத்திற்கு அனுப்பிவிட்டு ஜல்சா செய்ய முற்பட்டு ஏதாவது ஒரு விடுதிக்கு செல்லும் வழியில் அவரது நடத்தைகளை அறிந்த ஆட்டோக்காரன் அவரை தன் வசப்படுத்தி திருவிளையாடல்கள் செய்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
ஒரு வயதான சிறு குழந்தைக்கு ‘பனடோல் சிறப்’ பருக்குவதற்கு பெற்றோர் படும் பாடு குழந்தைகளை வைத்திருப்பவர்களுக்கு புரியும். ஆனால் வயதுக்கு வந்த இந்த குணசீலனுக்கு கட்டாயப்படுத்தி ஆட்டோக்குள் வைத்து எப்படி பியர் பருக்கி மயக்கப்பண்ணினார்கள் என்பது புரியவில்லை…
பியர் பருக்கியவுடனோ அல்லது மயக்க மருந்து கொடுத்தவுடனேயே, ஏரிஎம் அட்டை கடவுச் சொல்லை கூறும் அளவுக்கு மனத்தில் உள்ளவற்றை அறியலாம் என்றால், இனி வரும் காலம் வைத்தியசாலைகளில் மயக்க மருந்து கொடுக்கும் போதும் சாராயக்கடைகளில் குடிக்கும் போதும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமா?
நிறை வெறியில் திரியும் குடிகாரர்களுக்கு தாங்கள் வெறியில் உளறுவதே தவிர உண்மைகளை கூறுவது இல்லை எனபது அவர்களுக்கு மட்டுமே தெரியும். அவர்களின் உடல் சமநிலை போதையில் குழம்புவதே தவிர உள்ளம் உறுதியாக இருக்கும். அத்துடன் அந்த வெறியில்தான் அவர்கள் தாங்கள் நினைத்ததை நடத்தி முடிப்பார்கள்.. அல்லது உளறி முடிப்பார்கள்…உடல் மட்டுமே அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க கஸ்டப்படும். மற்றபடி குடிகாரர்கள் மிகவும் நிதானமானவர்கள்…
அண்ணன் குணசீலன் எங்கேயோ இசகு பிசகா மாட்டுப்பட்டுவிட்டார்… மனிசியிடம் தப்ப வேண்டும்தானே.. அதுதான் கதை அளக்கின்றார் போலும்…
இருப்பினும் அவர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்த கருத்துக்களை இங்கு தந்துள்ளோம்….
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு சிகிச்சைக்காக சென்ற நபர் ஒருவர் கடத்தப்பட்டு அவரின் கையிலுள்ள மோதிரம் மற்றும் என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அறியதந்துள்ளார் இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை இரவு மனைவியுடன் புறப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கு கொழும்பை வந்தடைந்தேன்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
மனைவியை பம்பலப்பிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தேன். பின்னர் அலுவல் ஒன்றுக்காக அன்று பிற்பகல் கோட்டைக்கு வந்தேன்.
அங்கு எனது அலுவல்களை முடித்துப் பின்னர் புதிய ஆடைகளையும் கொள்வனவு செய்து கொண்டு மீண்டும் மனைவியிடம் செல்வதற்கு மாலை 6.45 அளவில் தயாரானேன்.
அப்போது கோட்டை போஹாவச் சந்தியில் ஓட்டோவில் வந்த ஒருவர் என்னை எங்கு போகப் போகிறீர்கள் என்று கொச்சைத் தமிழில் கேட்டார்.
பம்பலப்பிட்டிக்குச் செல்ல வேண்டும் என நானும் கூறினேன். பதிலுக்கு அந்த ஓட்டோக்காரரும் ‘வாருங்கள் நான் பாணந்துறைக்குதான் போகின்றேன். வழியில் பம்பலப்பிட்டியில் இறக்கிவிடுகின்றேன் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் தரலாம்’ என்று சொன்னார்.
நானும் நம்பிக்கையாக அவருடைய ஓட்டோவில் ஏறிப் பயணம் செய்தேன். அங்கிருந்து மருதானை வரும் வரையும் என்னுடன் மிக நட்பாக உரையாடினார்.
மருதானைச் சந்தியில் உள்ள மதுபானக் கடை ஒன்றில் நிறுத்திவிட்டுக் ‘கொஞ்சம் இருங்கள் பியர் வேண்டி வருகின்றேன்’ எனக் கூறிவிட்டுச் சென்றவர் சில நிமிடங்களில் பியர் போத்துல் ஒன்றுடன் வந்தார்.
அதற்கிடையில் மேலும் ஒருவர் அங்கு வந்து அந்த ஓட்டோக்காரருடன் மிக நட்பாக உரையாடிவிட்டு அருகில் நின்றார். ஓட்டோக்குள் வைத்து பியர் போத்தலை உடைத்து கொஞ்சம் குடியுங்கள் என்று என்னை அந்த ஓட்டோக்காரர் கேட்டார்.
ஆனால் நான் அதற்கு மறுத்தேன். எனது மனைவி வைத்தியசாலையில் உள்ளார். நான் அங்கு போக வேண்டும். என்னை பம்பலப்பிட்டியில் இறக்கிவிடுங்கள் என மிகவும் தாழ்மையாக அவரிடம் வேண்டினேன்.
அப்போது அவருடைய பதில் என்னை கொஞ்சம் அதட்டியது. இதனால் எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது. அவரிடம் இருந்து என்னால் தப்ப முடியாது என்பதையும் நான் அப்போது உணர்ந்து கொண்டேன்.
ஏனெனில் ஓட்டோவைச் சுற்றி இருவர் அங்கு நின்றதைக் கண்ணுற்றேன். அந்த இருவரும் அவருடைய அடியாட்களாகவே இருக்கும் என்று கருதி நான் அந்த ஓட்டோக்காரரை எதிர்க்க விரும்பவில்லை.
பானத்தை பலாத்காரமாகப் பருக்க வைத்தனர்
முடிந்தவரை அவருடன் சமரசம் செய்து அங்கிருந்து விடுபட முயற்சித்தேன். மனைவி வைத்தியசாலையில் என்று கூறி மிகவும் இரந்து கேட்டேன். ஆனாலும் அவர் என்னை விடுவதாக இல்லை.
அவரிடம் இரக்கம் இருப்பதாகவும் தெரியவில்லை. பானத்தை பலாத்காரமாகப் பருக்கினார் கண் இமைக்கும் நேரத்தில் அவர் எனது கழுத்தைப் பிடித்து ஒரு சிறுதுளி பாணத்தைப் பருக்கினார்.
அதன் பின்னர் ஓட்டோவை அவர் பொரள்ளையை நோக்கிச் செலுத்தினார். பொரள்ளை வரையும் எனக்கு சற்று மயக்கமாக இருந்தது. அதன் பின்னர் எனக்கு என்ன நடந்தது என்றே தெரியாது என்றார்.
பின்னர் அம்பூலன்ஸில் தான் ஏற்றப்பட்டதைச் சற்று உணர்ந்ததாகவும் அதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை பகல் வரை தான் எங்கு இருக்கிறேன் எனத் தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் தனது துயரத்தை மேலும் விபரித்தார்.
அத்துடன் தனது கையில் இருந்த இரண்டு தங்க மோதிரங்கள், கை மணிக்கூடு, கைப் பையில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம், ஐம்பது ஸ்ரேலிங் பவுண்ஸ் மற்றும் கொள்வனவு செய்யப்பட்ட பெறுமதியான புதிய ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டதை தெரிந்து கொண்டேன் என்பதையும் வேதனையுடன் விபரித்தார்.
பொலிஸார் அறிவுறுத்தல்
ஏரிஎம்மில் இருந்து பணம் எடுக்கப்பட்டதை மனைவி கூறிய பின்னரே அறிந்து கொண்டதாகவும், கடவுச் சொல்லை எப்படி பெற்றார்கள் என்று தனக்கு புரியவில்லை என்றும் விபரித்தார். மொத்தமாக சுமார் ஏழு இலட்சம் ரூபாவரை இழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

