புதினங்களின் சங்கமம்

கொழும்பில் தனது போதைப்பொருளை திருடியதற்காக 24 வயது இளைஞனை அடித்தே கொன்ற நபர்..!

போதைப்பொருள் தகராறு காரணமாக மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனது போதைப்பொருளை திருடியதாக கூறி வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வந்து இளைஞனை அழைத்துச் சென்று அவரை மோசமாக தாக்கியுள்ளார்.