உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்துக்கு மேல் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டகிறாம்!!
பிரான்ஸ் நேரப்படி இன்று மாலை உலகம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடங்கியதால் அதன் பாவனையாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சேவர் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் Facebook, WhatsApp, Instagram உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடங்கியதால்,மில்லியன் கணக்கான இணையவாசிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.