புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

தன்னுடன் பல தடவைகள் உறவு!! அந்த வீடியோக்களை வைத்து பணம் பறிக்கிறான்!! புலம்பெயர் தமிழ் இளைஞன் மீது இலங்கை தமிழ் நடிகை பொலிசில் புகார்!! யார் அது?

தற்போது வெளிநாட்டில் உள்ள தனது முன்னாள் காதலன், தனக்கு பணம் தரவில்லையென்றால் தனது நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிப்பதாக இலங்கையில் தயாரிக்கப்படும் தமிழ் படங்களில் நடிக்கும் பிரபல நடிகையொருவர் செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

முறைப்பாட்டாளரும், வெளிநாட்டில் உள்ள அவரது காதலனும் சுமார் நான்கு வருடங்களாக தொடர்பு கொண்டிருந்ததாகவும், பின்னர், பிரபலமடைந்ததையடுத்து நடிகை உறவை முறித்துக் கொண்டுள்ளார். இதனால், அவரை பழிவாங்குவதற்காக, நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டி பணம் பறிப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி, வெளிநாட்டில் உள்ள முன்னாள் காதலன், புகார் அளித்த நடிகைக்கு பல கணக்கு எண்களை அனுப்பி, புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதைத் தவிர்க்க பணம் வரவு வைக்குமாறு மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன நடிகை, அதில் சில கணக்குகளிற்கு பணம் வைப்பு செய்துள்ளதாக சி.ஐ.டி தெரிவித்தது.

இதன்படி, சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகள் தொடர்பான அறிக்கைகளை கோருமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கிய நீதவான், விசாரணைகளை முடித்து நீதிமன்றத்திற்கு உண்மைகளை தெரிவிக்குமாறு திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.