அந்தரங்கத்தினுள் போதைப் பொருள் கடத்திய செல்வராணி அக்கா, கழிவு வாய்க்காலுக்குள் குதித்து நீந்தியது ஏன்? வீடியோ
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட முயன்றபோது, பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டதும், உடலில் மறைத்து வைத்திருந்த போதைப்பொருளுடன் ஓடிச்சென்று கழிவுநீர் வாய்க்கலில் குதித்து அட்டகாசத்தில் ஈடுபட்ட தமிழ் பெண்ணொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்ணாமலை செல்வராணி என்ற நீண்டகால போதைப்பொருள் வியாபாரியை கைது செய்துள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரிடம் இருந்து ஐந்து இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 12 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
செல்வராணி போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் தகவலறிந்ததும், மட்டக்குளி பொலிஸ் விசேட பணியகத்தினர், சந்தேகநபரின் வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்டனர். பெண் பொலிசார், செல்வராணியை சோதனையிட்ட போது, அவரது மார்புக் கச்சைக்குள் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை வீட்டின் ஒரு பகுதியில் வைத்து பொலிசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது, அவர் திடீரென சமையலறை பக்கமாக ஓடிச்சென்று, கழிவு நீர் செல்லும் வாய்க்காலுக்குள் குதித்துள்ளார். நீருக்குள் இருந்தபடி. தனது மார்புக் கச்சைக்குள்ளிருந்த போதைப்பொருள் பொதியை வெளியே எடுத்து வீசியெறிந்துள்ளார். அவர் சுமார் 10 நிமிடங்கள் வரை கழிவு நீருக்குள் அட்டகாசத்தில் ஈடுபட்டு, நீரையும் கலங்க செய்தார்.
மற்றுமொரு மேலதிக பொலிஸ் குழு ஸ்தலத்திற்கு வரவழைக்கப்பட்டு, பெரும் பிரயத்தனத்தின் பின் சந்தேக நபரை கைது செய்தனர்.
45 வயதான சந்தேக நபர் இதற்கு முன்னரும் பல தடவைகள் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

