ஹிஸ்புல்லாவுக்கு வந்த வித்தியாசமான ஆசை இது!!
எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் முஸ்லிம் மக்கள் சார்பில் களமிறங்கு
வதற்கு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ் புல்லா திட்டமிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக முஸ்லிம் மக்கள் மீது நடத்தப் படும் அடக்குமுறைகளை
உலகத்துக்கு ஓரணியில் நின்றுஎடுத்துச் சொல்லவும், இரு முதன்மைக் கட்சிகளின்
மீதான முஸ்லிம் மக்களின் நம்பிக்கையின்மையைப் பகிரங்கமாக
வெளிப்படுத்தவும் இவ்வாறு அவர் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்று
தெரியவருகிறது.
இது தொடர்பில் ஹிஸ்புல்லா உதயனுக்கு மேலும் தெரிவித்ததாவது:
அரச தலைவர் தேர்தலில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளேன். புத்திஜீவிகள்,
இளைஞர்கள் எல்லோரும் களமிறங்குங்கள் என்று கூறுகின்றனர். இது தொடர்பாக
தொடர்ந்து பேசிக்கொண்டுள்ளனர். நேற்றும் மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள், சமூக
மட்டங்களைச் சேர்ந்தவர்கள், முஸ்லிம்கள் என்று ஏராளமானவர்கள் கேட்டுள்ளனர்.
வற்புறுத்துகின்றனர். எனினும் இது தொடர்பில் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்.
இன்னும் ஒரு சில நாங்களில் தீர்மானிப்பேன் – என்றார்.
எதிர்வரும் டிசெம்பர் மாதமளவில் அரச தலைவர் தேர்தல் இடம்பெறவுள்ளது என்று
அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் முன்னணியில் இருந்து முன்னாள்
பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும், மக்கள் விடுதலை முன்னணியில்
இருந்து அனுரகுமார திசநாயக்கவும் தெரிவு செய்யப்பட்டள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி, மற்றும், சுதந்திக் கட்சியிடம் இருந்து இதுவரை
உத்தியோகபூர்வமான அறிவித்தல்கள் வரவில்லை. இம்முறை அரச தலைவர்
தேர்தலில் பல முனைப் போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில் வாக்குகள்
சிதைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறனதொரு நிலையில்
ஹிஸ்புல்லாவும் களமிறங்குவார் என்ற பேச்சுக்களும் வெளிக்கிளம்பியுள்ளன.

