புதினங்களின் சங்கமம்

மாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி (புகைப்படங்கள்)

மாங்குளம் – மல்லாவி வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர் என்று மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

மாங்குளம் வடகாடுப் பகுதியில் நேற்று இரவு புதன்கிழமை இந்த விபத்து இடம்பெற்றது.

மாங்குளத்திலிருந்து மல்லாவி நோக்கிச் சென்ற பிக்கப் வாகனம் வடகாடுப்
பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின் கம்பத்துடன்
மோதித் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியது.

அதில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலும் மற்றொருவர் மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையிலும் உயிரிழந்தார்.

மல்லாவி பாலிநகரைச் சேர்ந்த ஜே.தினேஷ்குமார் (வயது – 17), கே.திசாந்தன்
(வயது -18) ஆகிய இருவருமே உயிரிழந்தனர். அவர்கள் இருவருமே வாகனத்தில்
பயணித்தனர்.

விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று மாங்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

(